அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் சிறப்பு முகாம் அரசு ஊழியர்கள் 85 பேருக்கு கொரோனா தடுப்பூசி

அணைக்கட்டு, ஏப். 13: அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் 85 பேருக்கு ெகாரோனா தடுப்பூசி போடப்பட்டது. அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் பிடிஓக்கள், துணை பிடிஓக்கள், மண்டல துணை பிடிஓக்கள், கணக்காளர்கள், மேலாளர்கள், உதவியாளர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், திருமண நிதியுதவி திட்டம், பள்ளி சத்துணவு திட்ட அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், பிடிஓ அலுவலக ஊழியர்கள், தற்காலிகள் ஊழியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது அதிகாரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்ககைகளில் முன்கள பணியாளர்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு பிடிஓ, தாலுகா அலுவலகங்களில் சுகாதார துறையினர் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போட வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கைலாசம் தலைமையில் பிடிஓ அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பிடிஓ அலுவலகத்தில் பணியாற்றும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். மாலை வரை நடந்த சிறப்பு முகாமில் பிடிஓ அலுவலகத்தில் 85 பேருக்கும் தாலுகாவுக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகளில் சிகிச்சைக்கு வந்த 45 வயதிற்கு மேற்பட்டோர் 125 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: