களைகட்டிய தர்பூசணி விற்பனை வெயில் சுட்டெரிப்பதால்

கீழ்பென்னாத்தூர், ஏப்.8: கீழ்பென்னாத்தூரில் வெயில் சுட்டெரிப்பதால் தர்பூசணி விற்பனை கடைகட்டி உள்ளது.

கீழ்பென்னாத்தூரில் வழக்கமாக மே மாதங்களில் தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. இதனால், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் காலைமுதலே அனல்காற்று வீசு தொடங்குகிறது. இதன்காரணமாக இரவில் புழுக்கம் அதிகமாக ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் கீழ்பென்னாத்தூர்- திண்டிவனம் சாலையில் வெயிலை சமாளிக்க தர்பூசணி விற்பனைக்கு குவிந்துள்ளன. அவ்வாறு குவிக்கப்பட்டுள்ள தர்பூசணி ஒரு கிலோ ₹20க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் தாகம் தணிக்க தர்பூசணி விற்பனை களைகட்டி உள்ளது.

மேலும், கீழ்பென்னாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக 98.90 டிகிரி வெயில் கொளுத்தி வந்த நிலையில், தற்போது 100.08 டிகிரியாக காணப்படுகிறது. இந்த மாதமே இதுபோன்று வெயில் கொளுத்தி வருவதால், அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் கொடுமை இன்னும் அதிகமாக இருக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: