நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்: திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் உறுதி

கூடுவாஞ்சேரி, மார்ச் 26: நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன், பொதுமக்களிடம் உறுதியளித்தார். செங்கல்பட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வரலட்சுமி மதுசூதனனை ஆதரித்து திமுக கூட்டணி கட்சியினர் நேற்று காலை சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூர் செயலாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி 18 வார்டுகளிலும் தெருத்தெருவாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளருக்கு அனைத்து வார்டுகளிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் பேசியதாவது.அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் சாலை, தெருவிளக்கு, குடிநீர், கால்வாய் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும், பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதில், அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது போல் ஊழல் நடந்துள்ளது.

எனவே, திமுக சார்பில் 2வது முறையாக போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தால் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி முழுவதும் கட்டமைப்பு வசதிகள் செய்து தருவேன் என உறுதியளித்தார்.திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், பேரூர் நிர்வாகிகள் கே.பி,ஜார்ஜ், ஆர்.பத்மநாபன், அப்துல்காதர், ராமமூர்த்தி, எம்கேபி.சதீஷ்குமார், தினேஷ்குமார், ஜெமினிஜெகன், சாரதா தசரதன், ஸ்ரீமதி ராஜி, ஜான்சிராணி, முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் சதீஷ்குமார், டிஸ்கோ கணேசன், அச்சுததாஸ், குமரவேல், அரி, மாசிலாமணி, உதயநிதி மன்ற தொகுதி பொறுப்பாளர் எம்.கே.எஸ்.செந்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி, பேரூர் தலைவர் கிருஷ்ணன், மதிமுக மாவட்ட துணை செயலாளர் பாரத் ராஜேந்திரன், நகர செயலாளர் பாலசுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தென்னவன், நகர செயலாளர் திராவிட முரளி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஹைதர்அலி, பேரூர் செயலாளர் முஸ்தபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஷேக்தாவூத், இந்திய கம்யூனிஸ்ட் தேவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சம்பத் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: