அங்காளபரமேஸ்வரி கோயில் குண்டம் விழா

ஈரோடு, மார்ச் 21: ஈரோடு கீரக்கார வீதியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில் மகா சிவராத்திரி மற்றும் குண்டம் விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. இதையடுத்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், வெண்ணெய் காப்பு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். ஈரோடு காரைவாய்க்காலில் இருந்து அம்மன் சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி, பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில், விழாவில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நேற்று அதிகாலை நடைபெற்றது.

முதலில் கோயில் தர்மகர்கத்தா மற்றும் பூசாரிகள் குண்டம் இறங்கியதையடுத்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அம்மனுக்கு மாவிளக்கு படைத்தல், சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இன்று மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Related Stories: