சாமந்தி சாகுபடி பரப்பு அதிகரிப்பு

 

ராயக்கோட்டை, ஜூலை 1: ராயக்கோட்டை பகுதியில் சாமந்தி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் காய்கறிகள் சாகுபடிக்கு அடுத்து பூக்கள் சாகுபடி பிரதானம். ராயக்கோட்டை பகுதி அதிக மண் வளம் மற்றும் ஈரப்பதம் நிறைந்துள்ளது. இதனால் காய்கறிகளை விட செண்டுமல்லி, பட்டன் ரோஸ் மற்றும் சாமந்தி பூக்கள் பயிரிட உகந்தது. இதன் காரணமாக மற்ற பூக்களை விட, சாமந்தி தோட்டங்கள் தான் ராயக்கோட்டையில் அதிகம் தென்படுகிறது.

தற்போது,ராயக்கோட்டை பகுதியில், ஏராளமான விவசாயிகள் சாமந்தி தோட்டங்களை உருவாக்கியுள்ளனர். இந்த தோட்டங்களை உருவாக்க சாமந்தி நாற்றுகள் தேவை அதிகரித்துள்ளது. அதற்காக ஏற்கெனவே வளர்ந்து வரும் சாமந்தி செடிகளில், பூக்கள் பூக்காமல் இருக்க இரவில் எல்இடி பல்புகளை எரியவிடுகின்றனர். அவ்வாறு வளர்ந்த செடிகளின் துளிர்களை வெட்டி எடுத்து, தொட்டிகளில் நட்டு வளர்த்து விற்பனை செய்கின்றனர்.

Related Stories: