கிருஷ்ணகிரி, ஜூலை 1: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 3886 கிலோ கொப்பரையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.135.69-க்கும், குறைந்தபட்சம் ரூ.41.41-க்கும், சராசரியாக ரூ.129.69-க்கும் என மொத்தம் ரூ.4,50 லட்சத்திற்கு விற்பனையானது. இதன் மூலம் 54 விவசாயிகள் பயன்பெற்றனர்.இது குறித்து போச்சம்பள்ளி, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறியதாவது: விற்பனை கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) முறையில், விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் கொப்பரைக்கு நல்ல விலைக்கு விற்பனையானது. விற்பனை செய்யப்பட்ட கொள்முதல் தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், பருத்தி மற்றும் நெல் ஏலமும் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
