பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

 

உளுந்தூர்பேட்டை, ஜூலை 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூ. கள்ளக்குறிச்சி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் கொளஞ்சிமுத்து(31). கார் டிரைவரான இவர் பெங்களூருவுக்கு கார் சவாரி செல்லும்போது அங்கிருந்து ஹான்ஸ், குட்கா புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து உளுந்தூர்பேட்டை அருகே வானாம்பட்டு கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் அய்யப்பன் (31) என்பவரிடம் கொடுத்து அதை உளுந்தூர்பேட்டை மற்றும் நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இது திருநாவலூர் காவல் நிலைய போலீசாருக்கு வந்த தகவலையடுத்து நேற்று காலை 2 பேரையும் கைது செய்து 13 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், பெங்களூருவில் இருந்து குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: