பெங்களூரு: எல் நினோ தாக்கத்தால் பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க, குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்கள் கழுவ, செடிகளுக்கு ஊற்ற, நீச்சல் குளங்களை நிரப்ப முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் தண்ணீர் நுகர்வைக் குறைக்கும் Aerator-கள் பொருத்துவது கட்டாயம். இதை மீறினால் ரூ.5,000 அபராதம், குடிநீர் விநியோகம் 50% குறைக்கப்படும் எனவும் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
