திருமலை: ஐதாராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 திரைப்படத்தின் வெளியிட்டு விழா கடந்த 2024ம் ஆண்டு நடந்தது. இதில் நடிகர் அல்லு அர்ஜூன் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகர் அல்லு அர்ஜூனை ஏ-11 குற்றவாளியாக சேர்த்தனர். இதுதொடர்பான வழக்கு தொடர்பாக ஐதராபாத் நம்பள்ளி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
முன்னதாக இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் நேற்று நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தனர். படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று மதியம் நம்பள்ளி நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜரானார். பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
