ஹால்மார்க் விதிமீறல்: ஐதராபாத் நகைக்கடையில் 1.6 கிலோ நகை பறிமுதல்

 

ஐதராபாத்: நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் பிஐஎஸ் முத்திரை. தூய்மைக்கான குறியீடு மற்றும் எச்யுஐடி(HUID) எண் ஆகியவற்றைக் கொண்ட பிஐஎஸ்(BIS) ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஹால்மார்க் விதிமீறல்கள் நடந்ததாகக் வந்த தகவல் அடிப்படையில் இந்தியத் தரநிலைகள் பணியக (BIS) அதிகாரிகள், ஐதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ள அந்த நகைக்கடையில் ேசாதனை மேற்கொண்டனர்.

அங்கு கட்டாய பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதையும், பழைய ஹால்மார்க் குறியீடுகளைக் கொண்ட நகைகள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து மொத்தம் 1.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: