புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் ரூ. 7,623 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் முன்னாள் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான தேவாங் மோடி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ரவீந்திர சுதல்கர் ஆகியோரை நேற்று சிபிஐ கைது செய்துள்ளது.
ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 4,097 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதேவேளையில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் வழக்கில், 10 பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ரூ. 3,526 கோடியாகும் என்று சிபிஐ ெதாிவித்துள்ளது.
