உ.பியில் புதிதாக கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 2 தொழிலாளர்கள் காயம்

 

ஹர்தோய்: உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜ ஆட்சியில் கட்டுமானத்தில் உள்ள பாலங்கள் இடிந்து விழுந்தும், சரிந்து விழுந்தும் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக நீடிக்கிறது. அந்த வகையில், ஹமிர்பூர் மாவட்டத்தில் பர்சானி மற்றும் கந்தவூர் கிராமங்களுக்கிடையே பெட்வா ஆற்றின் மீது 2 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் பாலம் கடந்த மாதம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹர்தோய் மாவட்டம் தோடர்பூர் அருகேவுள்ள சையத்பூரில் உள்ள ஷர்தா கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை ஹைட்ரா இயந்திரத்தின் உதவியுடன் 70 அடி நீளமள்ள ராட்சத கான்கிரீட் பீம் பொருத்தும் பணியின்போது, ஒருபகுதி திடீரென கீழே விழுந்தது. இதில் கீழே பணியில் இருந்த ராகுல் மற்றும் ராஜேஷ்வர் ஆகிய தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் இருவரையும் இடிபாடுகளில் இருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: