சரி பார்ப்பு, மறுமதிப்பீட்டுக்கு பிறகு மாறிய 12ம் வகுப்பு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்: சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்தில் கிடைக்கும்

 

புதுடெல்லி: சிபிஎஸ்இ இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்திய ஆன்லைன் ஸ்கேன் மதிப்பீட்டு முறை மற்றும் விடைத்தாள் நகல் குளறுபடியால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஏராளமான மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம், “சிபிஎஸ்இ, 12ம் வகுப்பு விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகளை வௌியிடும் பணி தொடங்கி உள்ளது. முடிவுகள் பகுதி, பகுதியாக வௌியிடப்படுகின்றன. இதுவரை பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 87 சதவீதத்துக்கும் அதிகமானவற்றின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ” என நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சரி பார்ப்பு அல்லது மறுமதிப்பீட்டுக்கு பிறகு 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கான திருத்தப்பட்ட அசல் மதிப்பெண் பட்டியல்கள் உரிய காலத்தில் சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் பட்டியல்களை பெறுவதற்கு முன், மாணவர்கள் தங்கள் பழைய அசல் மதிப்பெண் பட்டியல்களை ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் புதுப்பிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை டிஜிலாக்கரிலும் பெற்று கொள்ளலாம். திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் உடனடியாக தேவைப்படும் மாணவர்கள் இந்த டிஜி லாக்கர் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: