கொலிஜியத்திற்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

 

புதுடெல்லி: இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தன்னை விட பணி அனுபவம் குறைந்த நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுவதாக நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரை செய்வது உயர் நீதிமன்ற கொலிஜியத்தின் தனிப்பட்ட திருப்தி மற்றும் முடிவை பொறுத்தது.

கொலிஜியத்தின் நடைமுறைகள் தொடர்பாக சிக்கலான விவாதங்களுக்கு வழிவகுக்க நாங்கள் விரும்பவில்லை. பணி அனுபவம் அதிகமாக இருப்பதற்காகவே அவர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல’’ என உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றார்.

Related Stories: