கோவில்பட்டி, ஜூன் 18: கோவில்பட்டியில் வரும் 25ம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து கோவில்பட்டி சப்-கலெக்டர் ஹிமான்ஷூ மங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 25ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. எனவே கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு மற்றும் எட்டயபுரம் ஆகிய வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
