செங்கல்பட்டு, ஜூன் 18: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பாவது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது மனிதவள தேவைக்குரிய சுமார் 5000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 9499055895 / 9486870577/ 8248185171 / 8122140214 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
