விளாத்திகுளத்தில் அளவுக்கதிகமாக கரம்பை மண் ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள்

 

விளாத்திகுளம், ஜூன் 18: விளாத்திகுளத்தில் அளவுக்கதிகமாக கரம்பை மண் ஏற்றி அதிவேகமாகச் செல்லும் டிராக்டர்களால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அச்சத்தில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கண்மாய்களில் உள்ள கரம்பை மண்ணை விவசாயிகள் விவசாயத்திற்காக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து விளாத்திகுளம் -மதுரை சாலையில் உள்ள பெரிய கண்மாயில் இருந்து விளாத்திகுளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக விவசாயத்திற்காக கரம்பை மண் டிராக்டர்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான டிராக்டர் அளவிற்கு அதிகமாக கரம்பை மண் ஏற்றிக்கொண்டு சாலையில் செல்கிறது. குறிப்பிட்ட அளவு லோடுக்கு மேல் எந்தவித பாதுகாப்பும் இன்றி திறந்தவெளியாக அள்ளிக்கொண்டு டிராக்டர்கள் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: