அம்பை அருகே பைக் விபத்தில் காயமடைந்தவர் பரிதாப சாவு

 

கேடிசி நகர், ஜூன் 18: அம்பை அருகே பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அம்பை அருகே ஊர்க்காடு சேனையர் தெருவை சேர்ந்த ராமரின் மகன் ராசு (30) கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது மனைவி ஊரான ஆம்பூருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அங்குள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக்கும், இவரது பைக்கும் நேருக்குநேர் ேமாதிக்கொண்டன. இந்த விபத்தில் ராசுவும் மற்றும் மற்றொரு பைக்கில் வந்தவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ராசு, நேற்று முன்தினம் இறந்தார். விபத்து குறித்து அம்பை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: