தேர்தல் வாக்குறுதிபடி இன்ஜி., கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர் இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தல்

 

ஈரோடு, ஜூன் 18: காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மக்கள் ராஜன், தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாது, தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொறியியல் கல்வி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்து. அந்த அறிவிப்பு ஏழை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. எனவே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவது காலத்தின் தேவையாகும். தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த 2026-27 கல்வியாண்டிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கான பொறியியல் கல்லூரி சேர்க்கை சிறப்பு இடஒதுக்கீட்டை 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.

Related Stories: