இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவு

இன்று அதிகாலை இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 11:27 மணிக்கு ஏற்பட்டது(இந்திய நேரப்படி 8.57 மணிக்கு) எனவும் இதன் மையப்பகுதி மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பலுவிற்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 46 கிலோமீட்டர் (28.5 மைல்) தொலைவில் அமைந்திருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருள்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு அமைப்புகள் சுனாமி எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை.

கடந்த 2018-ஆம் ஆண்டில் பலு நகரம் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் நில அதிர்வுகள் குறித்து மிகுந்த அச்சமும் விழிப்புணர்வும் கொண்டுள்ளனர்.

Related Stories: