அரியலூர், ஜூன் 16: அரியலூர் சடையப்பர் தெரு பகுதிக்கு குடிநீர் வழங்க மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அரியலூர் சடையப்பர் தெரு மற்றும் கோ.சி நகரவாசிகள், பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்புகளை வழங்க கோரி கலெக்டர் மிருணாளியிடம், அப்பகுதி பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர். அளித்த மனுவில், மேற்கண்ட தெருவில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த 2006ம் ஆண்டு அனுபந்தம் பட்டா வழங்கப்பட்டது. மேலும் கடந்த 6.10.2020 ஆண்டு 300 குடும்பத்தினருக்கு மனை வரிப்பட்டாவும் வழங்கப்பட்டது.
அதனை வைத்து கொண்டு குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது கேட்டால் இந்த பட்டா செல்லாது எனவும், ஏற்கனவே வாங்கிய பட்டாக்கள் செல்லாது என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். என கலெக்டர் தெரு வாசிகளுக்கு உரிய குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தப்பபட்டிருந்தது.
