பெரம்பலூர், ஜூன் 11: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் 13ம்தேதி நடைபெற உள்ளது கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்திருப்பதாவது: பொது விநியோகத்திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், எளம்பலூர் கிராமத்தில் மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலவலர் வாசுதேவன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், காரியனூர் கிராமத்தில்,
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் தலைமையிலும், குன்னம் வட்டம், ஒகளூர் (கிழக்கு) கிராமத்தில் பெரம்பலூர் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் பரிமளம் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில், பெரம்பலூர் தனித்துணை கலெக்டர் (ச.பா.தி), சுந்தரராமன் தலைமையிலும் நாளை மறுநாள் (13ம்தேதி) நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல், குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளை தெரிவித்து, பயனடையுமாறு கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
