இம்பால்: மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மாதம் 3 தேவாலய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து குக்கி இன மக்கள் 14 பேரை ஆயுத குழுக்கள் பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.இதையடுத்து காங்க்போக்பி மாவட்டத்தில் 6 நாகா மக்கள் மாயமாகினர். அவர்களை ஆயுத கும்பல் கடத்தி சென்றதாக தகவல்கள் வெளியாயின. கடத்தப்பட்ட 14 குக்கி இன மக்கள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், லேலான் வைபே மலை பகுதியில் 6 நாகாக்களின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் காங்போக்பியில் கடத்தி செல்லப்பட்ட நாகாக்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
