புதுடெல்லி: டெல்லியில் நிதி ஆயோக்கின் 11வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ”இந்த ஆண்டுக்கான நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கிறார்கள். இதில் ஒன்றிணைந்து அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாட்டு கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்படும். நாடு முழுவதும் தொழில்முனைவை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டை அதிகரித்தல் மற்றும் நிலையான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
நிர்வாகம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டாண்மை மற்றும் தரவு சார்ந்த அமைப்புகள் போன்ற முக்கிய காரணிகளை பயன்படுத்திக் செயல்படுத்துவதற்கான வரைபடத்தை கூட்டாகத் தயாரிப்பது குறித்த விவாதங்களில் குழு கவனம் செலுத்தும். அதே வேளையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலவிளைவுகளை கண்காணிக்கவும் பொறுப்புக்கூறல் மற்றும் அளவிடக்கூடிய தாக்கத்தை உறுதிப்படுத்தவும் ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையும் இதில் அடங்கும். அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாடு குறித்த தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் மாநிலங்களின் தொலைநோக்குப் பார்வைகளை ஒருங்கிணைப்பதிலும், சமமான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு அணுகுமுறையை வலுப்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தப்படும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
