பிரதமர் மோடி முடிவு: ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தற்போது வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள 24 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு, கட்சி மற்றும் ஆட்சியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதன் முதல்படியாக டெல்லி மாநில தலைவராக ஒன்றிய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல உத்தரப்பிரதேச மாநில தலைவராக ஒன்றிய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டார். கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய குழு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமைச்சரவையில் உள்ள சில முக்கிய தலைவர்கள் கட்சிப் பணிக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிய அமைச்சர்களான ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோருக்கு வரும் 18ம் தேதி நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2027ம் ஆண்டு உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 7 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பாஜ மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

பீகாரில் ஆர்.எல்.எம் கட்சியை இணைக்க பா.ஜ நெருக்கடி;
பீகாரில் ஆர்.எல்.எம் கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாகாவின் மகன் தீபக் பிரகாஷ் பீகார் மாநில அமைச்சராக உள்ளார். வரும் 18ம் தேதி நடைபெறும் சட்டமேலவை தேர்தலில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் அமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்எல்எம் கட்சியை பா.ஜவுடன் இணைக்கும்படி நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: