தாதுமணல் நிறுவனத்திடம் பினராயி விஜயன் மகள் பணம் பெற்றதாக வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் சிஎம்ஆர்எல் என்ற தாது மணல் நிறுவனத்திடம் இருந்து கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் ரூ.2.78 கோடி பெற்ற விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தீவிர மோசடி விசாரணை அமைப்பும் (எஸ்எப்ஐஓ) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்ககோரிசிஎம்ஆர்எல் நிறுவனம் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 26ம் தேதி இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மறுநாள் (27ம் தேதி) பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரில் உள்ள வீடுகள், வீணா விஜயனின் கணவரும், முன்னாள் அமைச்சருமான முகமது ரியாசின் கோழிக்கோட்டில் உள்ள வீடு உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியது.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்ககோரி சிஎம்ஆர்எல் நிறுவனம் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அமலாக்க துறையின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பணப்பரிவர்த்தனை பற்றி ஈடி இயக்குநர் விசாரணை;
சிஎம்ஆர்எல், எக்சாலாஜிக் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவின் நேற்று கொச்சின் வந்தார். அங்குள்ள அமலாக்க பிரிவு மண்டல அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் ராகுல் நவின் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: