இந்தியாவில் ஏர்ட்ரங்க் தரவு மையம் ரூ.3லட்சம் கோடி முதலீடு

புதுடெல்லி: ஆசியா-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஏர்ட்ரங்க்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராபின் குடாவை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பயணம் குறிப்பிடத்தக்க வேகத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் சுமார் ரூ.3லட்சம் கோடி முதலீடு செய்யவும், 5 ஜிகாவாட் தரவு மையத்திறனை உருவாக்கவும் ஏர்ட்ரங்க் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்புச் சூழலில் முன்மொழியப்பட்ட மிகப்பெரிய முதலீடுகளில் இதுவும் ஒன்றாகும். இத்தகைய முதலீடுகள் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இந்தியாவின் உலகளாவிய மைய நிலையை வலுப்படுத்தும் என்றும், அதே வேளையில் வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை ஆதரித்தல் மற்றும் புதுமை சார்ந்த வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும். உலகின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலம் இந்தியாவில் வடிவமைக்கப்படுவது தெளிவாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: