கரூர் -திண்டுக்கல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

கரூர், ஜூன் 4: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய திண்டுக்கல் சாலையில் அடிக்கடி ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் இருந்து ஜவஹர் பஜார், மார்க்கெட், மாரியம்மன் கோயில், திரையரங்கம், மாநகராட்சி அலுவலகம், டவுன் காவல் நிலையம், ரயிலவே நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளூககு செல்லும் அனைத்து வாகனங்களும், பொதுமக்களும், பழைய திண்டுக்கல் சாலையின் வழியாக சென்று வருகி்ன்றனர்.

மக்கள் பாதையில் இருந்து ஜவஹர் பஜார் வரை பழைய திண்டுக்கல் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும், திரையரங்கமும் உள்ளன. இதுபோன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் கனரக வாகனங்கள் நீண்ட நேரம் இந்த சாலையோரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு, மாற்று வழியில் செல்லும் நிலை பரவலாக நீடிக்கிறது.

இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இந்த பிரச்னை நிலவி வருகிறது. எனவே, வந்து செல்லும் கனரக வாகனங்களை கணக்கிட்டு போக்குவரத்து நெருக்கடி இல்லாத சமயங்களில் வந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Related Stories: