அரவக்குறிச்சி அருகே 19வது ஆண்டாக அரசுபள்ளி 100 சதவீதம் தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு

அரவக்குறிச்சி, மே 28: அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து 19ஆம் ஆண்டாக பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோவிலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 2025-26 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் தொடர்ந்து 19வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி தந்து இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அரவக்குறிச்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அளவில் 2025-26ம் கல்வியாண்டில் இப்பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சியைத் தந்துள்ளது. கரூர் மாவட்ட எல்லையில் உள்ள கோவிலூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற தலைவர் பழனிச்சாமி, செயலர் திருநாவுக்கரசு மற்றும் பொருளாளர் பெருமாள்சாமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

100 சதவீதம் தேர்ச்சி சாதனைகள் நிறைவேற அரும்பாடுப்பட்டு உழைத்த பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஆக்னல் அருள்தாஸ் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களான க.ரேஸ்மா பர்வீன், கி.பாக்கியதீபா, சு.அன்புக்கரசி, சி.சிவகாமி, மு.பாபுராஜ், சூ.மகாலட்சுமி, அல்மாஸ் ஜூமானா மற்றும் சவானா பர்வீன் ஆகியோரை பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் பாராட்டி வாழ்த்தினர்.

 

Related Stories: