கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: தாழம்பூ விற்பனை அமோகம்

 

கரூர், மே 26: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கரூர் பகுதியில் தாழம்பு விற்பனை அதிகரித்துள்ளது. தாவரங்களில் இயற்கையாகவே தாழம்பூ மிகுந்த வாசனை உள்ள ஒரு பூ இனம். தாழம்பூ சாகுபடி விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத்தரும் நறுமணப்பயிராகும். இதன் மலர்கள் மருத்துவக்குணம், வாசனை திரவியத் தயாரிப்பு மற்றும் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் அதிகளவில் பயன்படுகின்றன. தாழம்பூ சாகுபடியின் முக்கிய பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தாழம்பூவைச் சிறு துண்டுகளாக நறுக்கி வெந்நீரில் கொதிக்க வைத்து, நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வர உடல் உஷ்ணம் மற்றும் பித்த நோய்கள் குணமாகும். தாழம்பூவின் கொழுந்தை அரைத்து நெய்யுடன் சேர்த்துச்சாப்பிடுவதால் நீர்ச்சுருக்கு மற்றும் நீர் கடுப்பு சரியாகும்.

 

Related Stories: