லாலாப்பேட்டை, மே 26: லாலாப்பேட்டைஅருகே மேட்டு மகாதானபுரத்தில் அம்ரூத் திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சிக்கு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓமாந்தூர், தொட்டியபட்டி, குப்புரெட்டிபட்டி, பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, உடைய குளத்துப்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
