கரூர், மே 26: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவினை முன்னிட்டு நேற்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கான கம்பம் நடும் விழா மே 10ம் துவங்கி ஜூன் 8ம் அம்மன் குடிபுகுதல் வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக பூச்சொரிதல் விழா மே 15ம்தேதி இரவு விடிய விடிய நடைபெற்றது. இந்நிலையில், விழாவின் மற்றொரு முக்கிய விழாவான திருத்தேரோட்டம் நேற்று காலை கோயில் முன்பு துவங்கியது. கோயிலை சுற்றி வலம் வந்த இந்த திருத்தேரினை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
