சின்னதாராபுரம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற பெண் கைது

அரவக்குறிச்சி, மே 28: சின்னதாராபுரம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே சட்டவிரோதமாக மது விற்பதாக சின்னதாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சின்னதாராபுரம் போலீசார் நஞ்சைகாளக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி கருப்பாத்தாள் (52) சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. போலீசார் கருப்பாத்தாளைகைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1500 மதிப்புள்ள 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Related Stories: