முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டுகளில் முறைகேடுக்கு வாய்ப்பு அரசியல் கட்சியினர் புகார்

மானாமதுரை, மார்ச் 5: வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான விதிமுறைகளில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், சாதாரணமாக இயங்க முடியாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீட்டில் இருந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாதவர்களை கணக்கெடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறையில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் குறை கூறியுள்ளன. இது குறித்து திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி கூறுகையில், வயதான முதியோர், மாற்றுத்திறனாளிகளை அவர்களது குடும்பத்தினர் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் உள்ள இருக்கையில் அமரவைத்து பின்னர் வாக்குச்சாவடி அலுவலரிடம் கொண்டு சென்று அவரிடம் கேட்டு வாக்களிக்க வைப்பது நடைமுறையாக இருந்தது.

முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று தபால் ஓட்டு பெறும்போது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் ஓட்டு குறித்து விளக்கி அவர்களிடம் தபால் வாக்குசீட்டை கொடுத்து பதிவு செய்யும்போது முதியவரின் விருப்பத்திற்கு மாறாக தபால் ஓட்டு பெறும் அலுவலரே வேட்பாளரை மாற்றி தேர்வு செய்தால் அவர்களுக்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது.

மேலும் இந்த தபால் ஓட்டு எடுத்து வரும் சூழல், தபால் ஓட்டு பெறும்போதும், அதனை சம்பந்தப்பட்ட வாக்குசாவடி மையம் கொண்டுவரும் நடைமுறை, சாட்சிகள் போன்றவை குறித்தும் தெளிவாக விளக்கப்பட வில்லை. திமுக வேட்பாளர் அப்பாவு, பெற்ற தபால் ஓட்டுகள் அனைத்தும் செல்லாது என்று அறிவித்து இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறியதை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளார்.  எனவே முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் ஓட்டில் நம்பகத்தன்மை ஏற்படும் வகையில் தேர்தல் ஆணையம் விதிகளை கூடுதலாக அமல்படுத்துவதற்கு பதிலாக பழைய நடைமுறையை பின்பற்றினால் சரியாக இருக்கும் என்றார். 

Related Stories: