திருப்பூர்: 5 மாதங்களுக்கு பின்னர் திருப்பூரில் நடப்பு மாதத்தில் நூல் விலையில் ரூ.10 குறைந்துள்ளது என நூற்பாலைகள் அறிவித்துள்ளன. பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நூல் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் நூல் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
