கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டது தொடர்பாக அவருடன் சென்ற இளைஞர் வாக்குமூலம்

சென்னை: கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டது தொடர்பாக அவருடன் சென்ற இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். காரில் 6 பேர் இருந்ததாகவும், சுமன் சக்திவேல் என்பவர் காரை இயக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய இளைஞர், பாரில் இளம்பெண்ணிடம் சிலர் தவறாக நடந்ததை தட்டிக்கேட்டபோது தாக்குதல் நடத்தினர். பவுன்சர்களிடம் முறையிட்டவுடன் எங்களையும், தாக்குதல் நடத்தியவர்களையும் பாரில் இருந்து வெளியேற்றினர். கோபத்துடன் வெளியே வந்த கும்பல், தங்கள் மீது காரை ஏற்றியதால் இளம்பெண் உயிரிழந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஓட்டல் பாரில் மது பரிமாறப்பட்டதால் ஏற்பட்ட மோதலே இந்த கொடூர கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுபான பாருக்குள் தங்களுடன் 17 வயது சிறுமி உடன் வந்ததாகவும் இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். 17 வயது சிறுமியை மதுபான பாருக்குள் அனுமதித்தது எப்படி என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பிவருகின்றனர். கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தில் 6 பேரில் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: