திருப்பதி ஏழுமலையானை ஒரே நாளில் 92,000 பேர் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 92,010 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 52,346 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.3.76 கோடிக்கு காணிக்கை செலுத்தினர். ஒரேநாளில் 4.43 லட்சம் லட்டுகள் விற்பனையானது. அன்றைய தினம் 2.85 லட்சம் பேர் அன்னதானம் சாப்பிட்டனர். அதேநோளில் 3,631 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சிலாதோரணம் வரை காத்திருந்தனர். இவர்கள் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Related Stories: