பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரி குறைப்பு

புதுடெல்லி: மேற்காசிய போர் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையிலும், அதன் விலை உயர்வை தடுக்கும் வகையிலும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு ஒன்றிய அரசு ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இது 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.3ல் இருந்து ரூ.1.5 ஆகவும், டீசல் மீதான ஏற்றுமதி வரி ரூ.16.5ல் இருந்து ரூ.13.5 ஆகவும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி ரூ. 16ல் இருந்து ரூ.9.5 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் எவ்வித மாற்றமும் இல்லை.

Related Stories: