திருமலை: பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு திருமலைக்கு வந்தனர். அவர்கள் நேற்று ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் கடந்த 22ம் தேதி காஷ்மீரில் துவங்கி பெங்களூரு, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினோம். நிறைவாக நேற்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஷ் ஷட்டர் தலைமையில் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டோம் என்றார்.
