தேச நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை: கடற்படை புதிய தலைமை தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் உறுதி

புதுடெல்லி: இந்திய கடற்படையின் தலைமை தளபதியாக இருந்த தினேஷ் குமார் திரிபாதியின் பதவிக்காலம் நேற்று முன்தினம்நிறைவடைந்தது. இதையடுத்து கடற்படையின் புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நேற்று கடற்படையின் தலைமை தளபதியாக பொறுப்பேற்று கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், “இந்திய கடற்படை தேச நலன்களை பாதுகாப்பதில் எப்போதும் விழிப்புடன் இருக்கிறது. பிராந்திய பாதுகாப்பு சூழல் தற்போது மிகவும் சவாலானதாக, சிக்கலானதாக, கணிக்க முடியாததாக மற்றும் நிலைத்தன்மையற்றதாக இருக்கிறது. இந்த சூழலில் இந்திய கடற்படை, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்கும் வகையில் மிக உயர்ந்த செயல்பாட்டு தயார்நிலை மற்றும் போர்த்திறன்களை பேணுவதை உறுதி செய்வதே எனது முக்கிய முன்னுரிமையாக இருக்கும்” என்றார்.

 

Related Stories: