பொட்டாஷ், அமோனியம் சல்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களின் மீதான விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: தேசிய வேளாண் மாநாட்டில் அமைச்சர் வினோத் பேச்சு

சென்னை: டெல்லியில் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் காரீப் முகாம் 2026க்கான தேசிய வேளாண் மாநாட்டில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் பேசியதாவது: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத் திட்டங்களின் கீழ் நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மானிய உதவி நிறுத்தப்பட்டிருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, குறைந்த பட்சம் விதை விநியோகத்திற்கான மானிய உதவியையாவது தொடர்ந்து வழங்க வேண்டும்.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் பெரிய இயந்திரங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்த வேண்டும்.  தமிழ்நாட்டில் நிலவும் வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையினால், வேளாண் இயந்திரமயமாக்கல் இன்றியமையாததாக மாறியுள்ளது. இருப்பினும், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற உயர்மதிப்புடைய இயந்திரங்களுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வரம்பை 35 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

காரீப் பருவம் தொடங்கவுள்ள நிலையில், யூரியா மற்றும் உரங்களுக்கான தேவை அதிகரிக்கும். எனவே, மாதாந்திர ஒதுக்கீட்டுத் திட்டத்தின்படி உரங்கள் தடையின்றி வழங்கப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். சமீபத்திய உர விலை உயர்விற்கு விவசாயிகள் தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே பொட்டாஷ், அமோனியம் சல்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களின் மீதான விலை உயர் வினைத் திரும்பப் பெறவேண்டும். மாநிலத்தில் ஆண்டு தோறும் சுமார் 1.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன வசதிகளை விரிவுபடுத்தும் வாய்ப்புள்ளது. ஒன்றியஅரசின் நிதிப்பங்களிப்பை தற்போதைய ரூ.255 கோடியிலிருந்து ரூ.300 கோடியாக உயர்த்த வேண்டும் ஒத்துழைப்பை வழங்கும். இவ்வாறு அமைச்சர் வினோத் பேசினார்.

Related Stories: