அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய அமைப்புகளை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு பேராபத்து: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய அமைப்புகளை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு பேராபத்து என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் செயல்பட்டு வரும் பினராயி விஜயன், எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சித் திறன் கொண்ட தலைவராக மக்களிடையே தனித்துவமான மரியாதையை பெற்றவர்.

கேரள மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்திய அவரின் அரசியல் பயணத்தில், எந்தவித ஆதாரமும் இன்றி நடத்தப்பட்ட இந்த அமலாக்கத்துறை சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.

அரசியல் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படும் தலைவராக அவர் மீதான மக்களின் மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. அரசியல் பழிவாங்கும் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அமைப்புகளின் இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகத்தின் அடித்தளமான அரசியல் சுதந்திரமும், எதிர்கட்சிகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: