சேரன்மகாதேவி, வீரவநல்லூரில் துணை ராணுவப்படை அணி வகுப்பு

வீரவநல்லூர், மார்ச் 4:  சேரன்மகாதேவி, வீரவநல்லூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.6ல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சேரன்மகாதேவி, வீரவநல்லூர் பகுதிக்கு வருகை தந்த துணை ராணுவ படையினர் சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப் தலைமையில் பாதுகாப்பு அணிவகுப்பு நடத்தினர். வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய பாதுகாப்பு அணிவகுப்பானது முக்கிய வீதிகள் வழியாக சென்று போலீஸ் ஸ்டேசனில் நிறைவடைந்தது. தொடர்ந்து சேரன்மகாதேவிக்கு வந்த துணை ராணுவ படையினர் பேருந்து நிலையத்தில் துவங்கி காந்திபார்க் வழியாக தேரடி வீதி வழியாக சென்று பழைய பஸ் ஸ்டான்ட் வரை அணிவகுப்பு நடத்தினர். அணிவகுப்பின் போது துணை ராணுவ படை வீரர்கள் நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் வஜ்ரா வாகனத்துடன் ஊர்வலமாக சென்றனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் சேரன்மகாதேவி சுகதேவி, வீரவநல்லூர் ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Related Stories:

>