சாத்தூர் அருகே பிட்டர் மர்மச்சாவு

சாத்தூர், மார்ச் 4: சிவகங்கை மாவட்டம் பாலாவயல் பகுதியை சேர்ந்தவர் ஆலப்பன்(53). இவர் சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டியில் உள்ள வெங்கடேஸ்வரா போர்ட்ஸ் கம்பெனியில் தங்கி பிட்டராக வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தங்கு அறைக்கு தூங்க சென்றுள்ளார். நேற்று காலை வேலைக்கு செல்லாததால் அவருடன் வேலை செய்து வரும் வடிவேலு ஆலப்பனை எழுப்பியுள்ளார். ஆனால், ஆலப்பன் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் அவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து சோதித்து பார்த்து போது ஆலப்பன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து கம்பெனி மேனேஜர் ரவி, ஆலப்பன் மனைவி சித்ராவிற்கு(42) தகவல் தெரிவித்துள்ளார். தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று சாத்தூர் தாலுகா போலீசில் சித்ரா புகாரளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>