முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

கீழக்கரை, மார்ச் 4:  கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலையில் நடந்தது. கோயிலில் உள்ள வலம்புரி விநாயகர் முத்துமாரியம்மன் நாராயணசுவாமி, தர்ம முனிஸ்வரர் உள்ளிட்ட மூலஸ்தான பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்கால யாகசாலை பூஜை கடந்த 1ம் தேதி நடந்தது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. ஐந்தாம் கால யாகசாலை முன்னிட்டு நேற்று காலை 6 மணி அளவில் மங்கல இசை விக்னேஸ்வர பூஜை கோ பூஜை உள்ளிட்டவை நடந்தது.

பின்னர் யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவற்றுடன் கோயிலை வலம் வந்தது. கொடுமலூர் சிவஸ்ரீ ஸ்ரீதர் சுவாமி குருக்கள், நாகர்கோயில் செல்லமணி சந்திரசேகர சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினார். வானத்தில் கருடன் மூன்று முறை வலம் வந்தது. கோபுர கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு பால், இளநீர், தயிர், மஞ்சள், திரவிய பொடி ஆகியவற்றால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் அருகே அன்னதான கூடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: