6 மாத வாடகை ரத்து கோரி கொடைக்கானல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கொடைக்கானல், மார்ச் 3: கொடைக்கானலில் 6 மாத வாடகையை ரத்து செய்ய கோரி வியாபாரிகள் கடையடைப்பு, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கொடைக்கானலில் கொரோனாவால் கடந்த ஒரு ஆண்டாக சுற்றுலா தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, வியாபாரம் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். குறிப்பாக சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியிருந்த நகராட்சி தரை கடைகள் கடந்த 6 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் வாடகை கட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இதை கண்டித்தும், வாடகையை ரத்து செய்ய கோரியும் நேற்று ஏரிச்சாலை, கலையரங்க கடை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி அலுவலகம் எதிரே காந்தி சிலை முன்பு காத்திருப்பு, கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு 6 மாத வாடகையை ரத்து செய்ய கோரி கோஷமிட்டனர்.

Related Stories: