டிரைவர் தற்கொலை

பழநி, மார்ச் 3: பழநி அருகே பாலசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மலையாளம் (28). இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். மலையாளத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மலையாளம் தனது வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>