மேகதாது அணை குறித்த பேச்சு – கர்நாடக துணை முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட புதிய விரிவானத் திட்டம் மத்திய அரசிடம் வழங்கப்படும். மேகதாதுவில் அணைக் கட்ட தமிழகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான நீர்வரத்து குறையும். இது தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும். மேலும் இரு மாநிலங்களிடையேயான உறவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும்.

எனவே இத்தகைய முயற்சியை கர்நாடகம் உடனடியாக கைவிட வேண்டும். மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. தமிழக நலன்களை பாதுகாத்திட, மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்திட உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: