கோவை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். கோவை பா.ஜ தலைமை அலுவலகத்தில் பாஜ மாநில மையக்குழு கூட்டம் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார். அவரது தலைமையில் தான் அதிமுக உள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் கருத்துக்கூற இயலாது. மக்களை சந்திப்பது, மக்கள் பிரச்னைகள் குறித்து ஆராய்வது என நாங்கள் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்கிறோம். கோவையில் நடைபெறுவதும் அதுதொடர்பான கூட்டம்தான். சட்டமன்ற தேர்தல் பணிகளில் அதிமுக சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. அது தொடர்பாக நாங்கள் கூட்டத்தில் ஆலோசிக்கவும் இல்லை. இவ்வாறு கூறினார்.
