அண்ணா, காமராஜர், கலைஞர், எம்ஜிஆர், ஜெ., அரசியல் நடத்திய பூமி இது.!! லாட்டரி சீட்டு குடும்பம் கையில் சிக்கியிருக்கும் தமிழக அரசியல்… ஆர்.எஸ்.பாரதி வருத்தம்

சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயுஎம்எல் இணைந்துள்ள நிலையில் இதுகுறித்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்து உள்ளார். சொல்லாமல் திமுகவை விட்டுச் சென்று தவெகவு-க்கு ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் செய்த துரோகம் என அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரு அணியில் இருந்து வெற்றி பெற்று விட்டு, மற்றொரு அணியில் சேர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஆனால் ‘திமுகவை விட்டுச் சென்றவர்கள் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. ஏன்னென்றால் திமுக என்பது வற்றாத ஜீவநதி, அவ்வப்போது சிலர் வந்து இளைப்பாறி செல்வார்கள். திமுகவுக்கு இப்படிப்பட்ட அதிர்ச்சிகள் புதிதல்ல. மேலும் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக தோற்றுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக இரண்டே இடங்களில் தான் வெற்றி பெற்றிருந்தது.

ஆனால் 1996-ல் 173 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் லாட்டரி குடும்பம் ஒன்று அழுத்தம் தரும் சக்தியாக உருவெடுத்து உள்ளது. அண்ணா, பெரியார், காமராஜர், ராஜாஜி, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்கள் அரசியல் செய்த பூமியில் ஒரு லாட்டரி சீட்டு கும்பல் கைகளில் தமிழக அரசியல் சிக்கி இருப்பது உண்மையில் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது என்று ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்.

Related Stories: